சசி குடும்பத்தினர் சதி செய்து என் கணவரை பிரித்துவிட்டனர்!: தீபா

Must read

சென்னை:

வி.கே. சசிகலா குடும்பத்தினர் சதி செய்து தனது கணவர் மாதவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள் தீபா, “எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தீபா” பேரவை என்ற அமைப்பை துவங்கினார். அதற்கு முன்னும் பின்னுமாக வி.கே. சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது கூறிவந்தார்.

இந்த நிலையில், நேற்று தீபாவின் கணவர் மாதவன், “தீபாவை சில தீய சக்திகள் ஆட்டுவிக்கின்றன” என்று குற்றம்சாட்டியதோடு, தனியாக கட்சி துவங்கப்போவதாகவும் அறிவித்தார்.

இதற்கிடையே ஓ.பி.எஸ் அணயில் இணைந்த தீபா, இன்று செய்தியாளர்களிடம்….

, “ஆனால் நான் ஒளிவு மறைவின்றி செயல்பட்டு வருகிறேன்.

கடந்த இரண்டு 2 நாட்களாக கணவருடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை.
அவர் தனியாக கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது தவறான செயலாகும்.

எனது கணவரை சசிகலா குடும்பத்தினர்தான் இயக்குகிறார்கள். அவர்கள்தான் சதி செய்து என்னிடமிருந்து கணவரை பிரித்துவிட்டார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” என்று தீபா தெரிவித்தார்.

More articles

Latest article