பெங்களூரு,

ர்நாடக மாநிலத்தில் நவம்பர் 10ந்தேதி  திப்பு சுல்தான் பிறந்தநாளையாட்டி ‘திப்பு ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது. இதற்கு பாரதியஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக காங்கிரஸ் அரசு  திப்புசுல்தான் பிறந்தநாளை திப்பு ஜெயந்தி  அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.  நவம்பர் 10-ம் தேதி ‘திப்பு ஜெயந்தி’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

திப்பு சுல்தான்திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுவதற்கு பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டும், வரும் நவம்பர் 10ந்தேதி திப்பு ஜெயந்தியை கொண்டாட அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்கான அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பெயர் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு பாரதியஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி யான அனந்தகுமார் ஹெக்டேவுக்கும் மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டது. இவர் தனது தாயாருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கூறி மருத்துவரை தாக்கி புகழ்பெற்றவர்.

திப்பு சுல்தான்

தற்போது கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட இருக்கும் அழைப்பிதழில் தனது பெயரை சேர்க்க வேண்டாம் என அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதுபோல, மைசூர் தொகுதி பிஜேபி எம்பி. ஷோபா ஹெக்டேவும், திப்புசுல்தான் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். திப்புசுல்தான் விழாவை அரசு விழாவாக  கொண்டாடக்கூடாது என்றும்,  ஓட்டு வங்கியை கருத்தில்கொண்டே காங்கிரஸ் அரசு திப்பு ஜெயந்தியை கொண்டாடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், திப்பு விழா கொண்டாடப்படுவதை இந்துக்கள் மற்றும் கன்னடர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறி உள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்களது பெயர்களை அழைப்பிதழில் சேர்க்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளவர்களின் பெயர்கள் அழைப்பிதழில் இடம்பெறாது என்று கூறினார்.

மேலும், திப்பு ஜெயந்தி விழா அழைப்பிதழ் மாநில, மத்திய அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள்,  முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதை ஏற்பதும், மறுப்பதும் அவர்களது விருப்பம். தற்போது இந்த விழா அரசியல் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது.

பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக திப்புசுல்தான் 4 முறை போரிட்டுள்ளார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

கடந்த ஆண்டு, திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து  கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் கண்டன பேரணி நடைபெற்றது.  அதேபோல் மைசூரில் முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தலைமையிலும் கண்டன பேரணி நடைபெற்றது. இதன் காரணமாக பல மாவட்டங்களில்  144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கர்நாடகாவில் ராஜாவாக இருந்த திப்புசுல்தான் ஆங்கிலேயே அரசுக்கு எதிராக குரல்கொடுத்தவர். அவர் குறித்த நினைவு சின்னங்கள்  பெங்களூரு,  மங்கலூர் மற்றும் மைசூர் போன்ற இடங்களில் வரலாற்று சின்னங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.