கரேன் ஆயிஷா ஹமிதான்

டில்லி,

லகத்தையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத  இயக்கத்திற்கு இந்தியாவிலிருந்து ஆட்களை சேர்த்த பெண் பிலிப்பைன்சில் கைது செய்யப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் தனது கொடூரமான செயல்கள்மூலம்  பயங்கரவாதத்தை பரப்பிவரும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக ரகசியமாக பல நாடுகளில் ஆட்களை சேர்க்கும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது. கேரளாவை சேர்ந்த சிலர் ஐஎஸ் பயங்கரவாதத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதன் காரணமாக ஒருசிலர் கைதும் செய்யப்பட்டார்கள். இதுகுறித்து  புலனாய்வு அமைப்பு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவா இயக்கத்துக்கு இளைஞர்களே சேர்க்கும் விதமாக, அவர்களிடம்  ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு  மூளைச்சலவை செய்து வந்த ஒரு பெண்ணை பிலிப்பைன்ஸ் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் கரேன் ஆயிஷா ஹமிதான். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கி வந்த பயங்கரவாத இயக்கத்தின்  தலைவர் முகமது ஜபார் மகீத்தின் மனைவி. முகமது ஜாபர் மகீதின் ஏற்கனவே இறந்துவிட்டார்.

கரேன் ஆயிஷா  சமூக ஊடகங்கள் மூலம் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஆட்களை பயங்கரவாத இயக்கத்துக்கு சேர்த்து வருவதாக வந்த தகவலின் பேரில் அவரை  பிலிப்பைன்ஸ்  காவல்துறை கண்காணித்துவந்தது.

இந்நிலையிலும், இந்தியாசார்பாகவும் பிலிப்பைன்ஸ்க்கு தகவல் தரப்பட்டது. அதன்படி சில தகவல்களும் பகிரப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருடன்  தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.