பெங்களூரு,
ர்நாடக மாநிலத்தில் இன்று திப்பு சுல்தான் பிறந்தநாளையாட்டி ‘திப்பு ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது. இதற்கு பாரதியஜனதா எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு முதல் கர்நாடக காங்கிரஸ் திப்புசுல்தான் பிறந்தநாளை திப்பு ஜெயந்தி இன்று அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.  நவம்பர் 10-ஆம் தேதியான இன்று ‘திப்பு ஜெயந்தி’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

திப்பு சுல்தான்
திப்பு சுல்தான்

திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுவதற்கு பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆனால், திட்டமிட்டபடி திப்பு ஜெயந்தி கொண்டாடப்படும் என்று கர்நாடக அரசு  அறிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு, திப்பு ஜெயந்தியின்போது,  மடிகேரி பகுதியில் இருவேறு மதத்தினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறி, 2 உயிரிழப்புகள் ஏற்பட்டது.
எனவே அதேபோல், இந்த ஆண்டும், திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டால் மதரீதியான மோதல்கள் நடை பெறலாம் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. அதில் ஏராளமான  பாஜக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். சட்டப்பேரவையை நோக்கி அவர்கள் செல்ல முயன்றபோது எடியூரப்பா, முன்னாள் துணை முதல்வர் அசோக் உட்பட 300-க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
அதேபோல் மைசூரில் முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தலைமையில் நடந்த கண்டனப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும் பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினரை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
இன்று கர்நாடக அரசை கறுப்புக்கொடி பேரணி  நடத்த எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து. எனவே, மைசூர், குடகு, பெலகாவி, ஹூப்ளி உள்ளிட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு ரிசர்வ் போலீஸ் 119 ப்லாட்டூன்கள், 9000 ஹோம் காவலர்கள், மத்தியப் பிரிவு 7 கம்பெனிகள் கர்நாடகாவில் கலவரங்களை, வன்முறைகளைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.