யோத்தி

ன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆம் ஆண்டு தினம் என்பதாலும் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்துள்ளதாலும் அயோத்தி நகரில் கடுமையான பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.

சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் உள்ள பாபர் மசூதி ராமர் கோவில் கரசேவகர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.   அதையொட்டி அந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் எனவும் மீண்டும் மசூதி கட்ட வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது.  இஸ்லாமியர்கள் இந்த டிசம்பர் 6 ஆம் தேதியைக் கருப்பு தினம் என அழைத்தனர்.   எனவே டிசம்பர் ஆறாம் தேதி அன்று நாடெங்கும் குறிப்பாக அயோத்தியில் கடுமையான  பாதுகாப்பு இடப்படுவது வழக்கமாகும்.

டிசம்பர் 6 ஆம் தேதி அன்று இந்துக்கள் மட்டும்  தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.  இடிக்கப்பட்ட மசூதியை  மீண்டும் அதே இடத்தில் கட்ட இஸ்லாமியர்கள் தொடர்ந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்   இதைப் போல் இந்துக்கள் அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பின்படி அந்த இடத்தில்  ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் எனவும் மசூதி கட்ட வேறு இடத்தில் அரசு நிலம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.    அதன்படி நிலம் வழங்கப்பட்டது.   கோவில் கட்டுமான பணிகளும் தொடங்கி உள்ளன.   ஆயினும் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அதன்படி அயோத்தி நகர் முழுவதும் இன்று பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.  சமூக வலைத் தளங்கள் உள்ளிட்டவற்றில் வெளியாகும் இது குறித்து வெளியாகும் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நகரெங்கும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் கலவரம் நேர்ந்தால் அடக்கத் தயார் நிலையில் உள்ளனர்.