இந்துக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அடி உதை தான் : பஜ்ரங் தள் மிரட்டல்

Must read

வுகாத்தி

ந்துக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைகளைக் கொண்டாடினாலோ கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டாலோ அடி உதை கிடைக்கும் என இந்து அமைப்பான பஜ்ரங் தள் மிரட்டல் விடுத்துள்ளது.

ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தையொட்டி டிசம்பர் 25 ஆம் தேதி அன்று உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இந்தியாவில் அன்றைய தினம் இந்துக்களும் தேவாலயங்களுக்கு மற்றும் கிறிஸ்துவ நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடுவது பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது.  இந்நிலையில் இந்து அமைப்பான பஜ்ரங் தள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பஜ்ரங் தள் சார்பில் அசாம் மாநிலத்தில் ஒரு நிகழ்வு நடந்தது.  அந்த நிகழ்வில் பஜ்ரங் தள் அமைப்பின் பொதுச் செயலாளர் மித்து நாத் உரையாற்றி உள்ளார்.  அவர் தனது உரையில், “இந்துக்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவாலயங்களுக்குப் போனாலோ அல்லது கிறிஸ்துமஸ் கொண்டாடினாலோ அவர்களுக்குக் கடுமையான அடி உதை கிடைக்கும்.   கிறிஸ்தவர்கள் ஷில்லாங்கில் கோவில்களைப் பூட்டி வைக்கும்  போது நம் அவர்களோடு இணைந்து பண்டிகை கொண்டாடுவதா?

நாங்கள் ஒரு போதும் இதை அனுமதிக்க மாட்டோம்.  வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தலைப்புச் செய்தி என்னவாக இருக்கும் என என்னால் சொல்ல முடியும்.   கிறிஸ்தவர்கள் நடத்தும், ஓரியண்டல் பள்ளிகளை பஜ்ரங் தள் ரவுடிகள் சேதப்படுத்தியதாகச் செய்திகள் வரும்.,  எங்களை ரவுடிகள் என அழைப்பதைப் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை.

நாம் ரவுடிகள் இல்லை.  ஆனால் இந்துப் பெண்கள் மீது கை வைத்தாலோ அ;ல்லது தொல்லை அளித்தாலோ நாங்கள் ரவுடிகள் ஆக மாறி விடுவோம்.   அதற்காக நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்,.   ஒரு போதும் இந்துக்களைக் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article