சென்னை

ன்று முதல் பொங்கல் பண்டிகைக்கான அரசு விரைவு பேருந்து முன்பதிவு தொடங்குகிறது.

அடுத்த மாதம் 15 ஆம் தேதி அன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.அதன்படி  ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16-ஆ தேதி மாட்டுப்பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் என 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊர் செல்ல ஏதுவாக அரசு விரைவு பேருந்துகள் மட்டுமின்றி  சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடச் செல்லும் மக்கள் 13ஆம்தேதி வெள்ளிக்கிழமை முதல் பயணத்தைத் தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர் நேரிலும் இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.