விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் பிரிவு இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரோஜர் பெடரர் – ரபேல் நடால் மோதல் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியை காண்பதற்கான ஆரம்ப நுழைவு டிக்கெட்டின் விலை சுமார் 7,000 பவுண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவுக்கான இரண்டாவது அரையிறுதி போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், மற்றொரு முன்னணி வீரரான ரபேல் நடாலை எதிர்த்து விளையாடி வருகிறார்.

கடந்த 2008ம் ஆண்டு வரை டென்னிஸ் உலகின் சாம்பியனாக பெடரர் பார்க்கப்பட்டார். ஆனால் அந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரின் இறுதி போட்டியில் பெடரரை தோற்கடித்து, பட்டத்தை வென்றார். அப்போது முதல் நடால் உலகின் முன்னணி வீரராக வலம் வருகிறார். முதல் இரு இடங்களை இவ்விரு வீரர்களும் மாறி, மாறி பிடித்து வந்தாலும், 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விம்பிள்டன் தொடரில் மோதுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் தொடரின் லீக் சுற்றுக்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய ரோஜர் பெடரர்  மற்றும் ரபேல் நடால், நான்காவது முறையாக ஒரு விம்பிள்டன் தொடரில் மோதுகின்றனர். இது இவர்கள் இருவரும் சந்திக்கும் 40வது போட்டியாகும்.

பெடரர் தன் 9வது விம்பிள்டன் பட்டத்தையும், நடால் தன் மூன்றாவது விம்பிள்டன் பட்டத்தையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் இந்த சூழலில், இப்போட்டிக்கான டிக்கெட்டின் ஆரம்ப விலையே அதிர வைக்கும் அளவுக்கு இருக்கிறது என்று யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாகூ நிறுவனத்தின் தகவலின் படி, போட்டிக்கான டிக்கெட்டின் ஆரம்ப விலை 7,000 பவுண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு, விற்கப்பட்டுள்ளது. இது இந்திய பண மதிப்பு படி, ரூ. 06,03,406 ஆகும்.

இதற்கு முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய கால்பந்து போட்டியான சூப்பர் பவுல் போட்டிக்கு 3,500 டாலர் என டிக்கெட்டின் ஆரம்ப விலை நிர்ணையம் செய்யப்பட்டிருந்தது. இது இந்திய பண மதிப்பு படி, ரூ. 2,40,152 ஆகும்.

இந்த விலை உயர்வுக்கு, ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆர்வமே காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போட்டியில் வெல்லும் வீரர், இறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]