சென்னை:
சென்னையில் வருகிற வியாழன் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை, கேரளாவில் நன்றாக பெய்துவருகிறது.  தமிழகத்தில் கன்னியாகுமரி உட்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.
இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
maxresdefault
இந்த இரு  நாட்களும் வானம் மேகமூட்டமாக காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். புதன்கிழமை 77 டிகிரி முதல் 87 டிகிரி வரையும், வியாழக்கிழமை 75 டிகிரி வரையும் வெயில் பதிவாகும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஜூன் மாதத்தில் வழக்கமாக சென்னையில் 18 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 43 மில்லிமீட்டர் கூடுதலாக பெய்துள்ளது. அதாவது 61 மிமீ மழை பெய்துள்ளது” என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.