சென்னை:
மிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில் குறிப்பிட்டார்.

கருணாநிதி
கருணாநிதி

திமுக மருத்துவ அணி செயலாளர் பூங்கோதை இல்ல திருமண விழாவில் பங்கேற்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி பேசியதாவது :
“தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும்.
தமிழ் சிறந்த மொழியாக இருக்கும் போது பிற மொழிகளை திணிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர். தமிழகத்தில் வட மொழியை திணிக்க நினைத்தால் தமிழர்கள் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்து கிளர்ந்து எழ வேண்டும்.
பூங்கோதை இல்ல திருமண விழாவில்...
பூங்கோதை இல்ல திருமண விழாவில்…

கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கிளர்ச்சி எழுந்ததோ அது போல் எழ சமஸ்கிருதம் இருந்து விட கூடாது. கிளர்ச்சி உருவாக யாரும் காரணமாக இருந்து விடக்கூடாது. ஆளும் கட்சியின் ஆசியோடு சமஸ்கிருதம் பரப்ப முயற்சி நடக்கிறது. இழித்துரைக்கப்பட்ட இந்த மொழிக்கு தமிழகத்தில் ஆதிக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தங்கள் மொழியை காப்பாற்ற, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும். வட மொழி ஆதிக்கம் இருந்தால் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும்”  என்று கருணாநிதி பேசினார்.