தமிழகம், புதுவையில் இடி, சூறாவளி மழை:

Must read

சென்னை:

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில்  அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் துவங்கிய பிறகு கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அதே நேரம் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே  கோடை மழை பெய்து வருகிறது.

 

வேலூரின் திருப்பத்தூரில் (9 செ.மீ.,) நெல்லை, குமரி மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்து வருவதால், கோடையின் தாக்கம் குறைந்துள்ளதாக  மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும்  பல இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேநேரம் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

More articles

Latest article