புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் பலத்த மழையுடன் இடி மில்லல் ஏற்பட்டது. அப்போது திடீரென விழுந்த இடியின் தாக்கல் 4 பெண்கள் உயரிழந்த நிலையில், மேலும் 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. ஆனால், முன்னதாகவே பல இடங்களில் சமீப நாட்களாக மழை பெய்து வருகிறது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நேற்று லேசான மழை பெய்து கொண்டிருந்ததால், புதுக்கோட்டை அருகே உள்ள வைத்தூர் பகுதியில், நிலக்கட்டலை பயிரிட்ட விவசாயிகள், அதை பிடுங்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து, அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் 20 பேர் நிலக்கடலை பிடுங்கும் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென பலத்த மின்னலுடன் இடி விழுந்துள்ளது.

இதில் கலைச்செல்வி ( வயது 45), லட்சுமி அம்மாள் (வயது  64), சாந்தி (வயது  40), விஜயா(வயது 45) ஆகிய 4 பேர் சம்பவஉயிரிழந்தனர். மேலும்  17 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, எஸ்.பி செல்வராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்த பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும்,  உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும் என்றார்.

புதுக்கோட்டையில் தொடர் மழை பெய்து வரும் சூழலில், இதுபோன்ற திறந்த வெளியில் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர்  கூறினார்.