
அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா , பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.
வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.
முழுக்க அரசியல் பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.
‘துக்ளக் தர்பார்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன்டிவியில் ரிலீசாகிறது. வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.இதன் முன்னோட்டமாக புதிய புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து துக்ளக் தர்பார் நெட்ஃபிலிக்ஸிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]உலக அளவில் எங்குமே வெளிவராத புத்தம் புதிய திரைப்படம்!
நமது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கலக்கலான திரைப்படம்
துக்ளக் தர்பார்
செப்டம்பர் 10, 6.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்!#SunTV @VijaySethuOffl @RaashiiKhanna_ @mohan_manjima @rparthiepan #GovindVasantha #TughlaqDurbar pic.twitter.com/N3WpORwCvn— Sun TV (@SunTV) August 28, 2021