‘துக்ளக்’ சரத்குமார்…  சமக தொண்டர்கள் குமுறல்

Must read

நெட்டிசன்:

டிகர் சரத்குமார் நேற்றுதான் டிடிவி தினகரனை சந்தித்து, அவருக்கு ஆதரவு என்று பேட்டி கொடுத்தார். அவர் அறிவித்து 12 மணி நேரத்திற்குள் அவரது வீடு வருமான வரித்துறையினரால் அதிரடியாக சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே திமுக, அதிமுக என்று ஒவ்வொரு கட்சியாக மாறி வந்துள்ள சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்று தனியாக ஒரு கட்சி ஆரம்பித்தார்.

திமுகவில் இருந்தபோது, பாராளுமன்ற மேல்சபை எம்.பியாகவும் இருந்து பதவி சுகம் அனுபவித்தார்.

பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவு என்று அறிவித்து, தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலின்போது ஜெ.அவரை கண்டுகொள்ளாததால் தனித்து போட்டி என்றார்… பின்னர் தனது பருப்பு வேகாது என்று நினைத்து மீண்டும் ஜெ.காலில் விழுந்தார். அதன் காரணமாக அவருக்கு திருச்செந்தூர் தொகுதி வழங்கப்பட்டது. ஆனால் அங்கு அனிதாவிடம் தோல்வியுற்று மண்ணை கவ்வினர்.

இந்நிலையில் ஜெ. மரணம் அடைந்ததை தொடர்ந்த அதிமுக உடைந்தது. அப்போது ஓபிஎஸ்க்கு ஆதரவு என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தனித்து போட்டி என்று அறிவித்து, வேட்பாளரையும் அறிவித்தார்.

ஆகா…  தலைவருக்கு ரோஷம் வந்துவிட்டதுபோல என அவரது கட்சி தொண்டர்கள் சிலாகித்தி ருந்த வேளையில், அவரது கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடியானது. சரத்குமார் முன்மொழிந்து கையெழுத்து போடவில்லை என்று கூறப்பட்டது.

அப்போதே இதில் ஏதோ வில்லங்கம் நடந்திருக்கிறது என்று நிர்வாகிகளிடையே கசமுசா பேச்சு நடைபெற்றது.

இதன் காரணமாக அவரது கட்சி தொண்டர்கள் வெறுப்படைந்தனர். இவர் எதையுமே சரியாக செய்வதில்லை என்று குமுறினர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துவிட்டு, ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவிக்கு ஆதரவு என்று அறிவித்தார்.

சரத்குமாரின் இந்த தன்னிச்சையான அறிவிப்பு கட்சி நிர்வாகிகளிடையே மீண்டும் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

சரத்குமாரின் இந்த முடிவு, அவரது  தான்தோன்றித்தனத்தை காட்டுவதாகவும், இதுவரை எந்தவொரு பிரச்சினை குறித்தும் கட்சி நிர்வாகிகளை ஆலோசித்து முடிவு எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

சரத்குமார் தன் குடும்பத்தை மட்டுமே பார்ப்பார் என்றும், தன்னை நம்பி வந்த தொண்டர்களின் எண்ணத்துக்கு மதிப்பளிக்க மாட்டார், அவர்களை நட்டாற்றில் விட்டுவிடுவார் என்பதற்கு நேற்றைய அறிவிப்பு ஒரு எடுத்துக்காட்டு  என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார் என்று அவரது கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாகவே அவர் தமிழக அரசியலில் அனாதையாக உள்ளார் என்றும் கூறினர்.

இந்நிலையில்,  தற்போது, தமிழ்நாடே காரி துப்பும் சசி குடும்பத்தை சேர்ந்த தினகரனை சந்தித்து ஆதரவு என்றும்,  எனது குடும்ப பிரச்சினை காரணமாக  அவருக்கு ஆதரவு என்று கூறியிருப்பது வெட்கக்கேடானது என்று குமுறுகின்றனர்.

ராதிகாவின் கண் அசைவுக்கு ஏற்றவாறே சரத்குமார் செயல்படுகிறார் என்றும்… அவர் என்ன சொல்கிறாரோ அதையே செய்கிறார் என்றும் , ராதிகாவிடம் கோடி கோடியாக பணம் கொட்டி கிடக்ருகும்போது, குடும்ப பிரச்சினைக்காக டிடிவியிடம் மண்டியிட்டேன் என்று என்று சொல்வது அவர் சார்ந்த கட்சிக்கு அவமானம் என்றும், அவருக்கே இது அழகாக தெரிகிறதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சரத்குமாரின் நேற்றைய அறிவிப்புக்கு பிறகு, அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலோர் அவரது கட்சியில் இருந்து விலக முன்வந்துள்ளார்கள்.

ஏன், அவர் வேட்பாளராக அறிவித்த, சமத்துக்கட்சி வடசென்னை தலைவர் அந்தோனி சேவியர்கூட சரத்குமாரின் அறிவிப்பு காரணமாக மனம் வெதும்பிபோய் உள்ளார்.

துக்ளக் ஆட்சி போல அவ்வப்போது தனது நிலையை பச்சோந்தி போல் மாற்றிக்கொள்ளும் சரத்குமார் அரசியலுக்கு லாயக்கற்றவர் என்று அவரது கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இன்று சரத்குமார் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தால் கட்சி தொண்டர்கள் குவிவது வழக்கம். ஆனால், சரத்குமார் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது… ஆனால் ஒரு தொண்டனைகூட காணவில்லை….

ஒருசில கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தும் சரத்துக்காக குரல்கொடுக்க யாரும் முன்வரவில்லையாம்…

இதன் காரணமாக செய்வதறியாது தனிமையில் தவிக்கிறாராம் பச்சை தமிழன் சரத்குமார்…

தற்போது சினிமாவைவிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், விரைவில் அரசியலில் இருந்தும் ஓரங்கட்டப்படுவார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்…

More articles

Latest article