கடந்த ஜூலை மாதம் வெளியாகி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த படம் ‘தோழர் வெங்கடேசன்’ . ஆனாலும், எதிர்ப்பார்த்தது போல படம் ரசிகர்களை சென்றடையவில்லையே என்று படக்குழு கவலைப்பட்டது.

அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கிய இப்படத்தில் அறிமுக நாயகன் அரி சங்கர், நாயகியாக மோனிகா சின்ன கோட்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தற்போது ‘தோழர் வெங்கடேசன்’ படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. டிஜிட்டல் தளத்தில் இப்படம் வெளியான சில நாட்களிலிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது படக்குழுவினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளித்துள்ளது.

மேலும், இப்படத்தின் ஒரு பாடலை பேஸ்புக் வழியாக ஒன்றரை கோடி பேர் பார்த்துள்ளார்களாம்.