தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, இன்று  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேர் ஆடி அசைந்தாடி வருகிறது. தேர் செல்லும் பாதையில் முறையான பராமரிப்பு செய்யாதால், தேரின் அலங்காரப் பந்தல்  பல இங்களில் மின்கம்பம் உள்பட பல பகுதிகளில் சிக்கிசேதமடைந்தது. இது பக்தர்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடபபாண்டு,  சித்திரை பெருவிழா  ஏப்ரல்  6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த தேரோனது, சுமார்  25 டன் எடையுள்ள இலுப்பை மற்றும் தேக்கு மரங்களைக் கொண்டு 30க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மற்றும் சிற்பிகளால் தேர் கட்டப்பட்டது. இது சிம்மாசனத்துடன் மூன்று அடுக்குகளைக் கொண்டிருந்தது. ஆகமங்களின் அடிப்படையில் தேர் சிற்பங்கள் இலுப்பை மரத்தினால் செய்யப்பட்டன. சிம்மாசனம் என்று அழைக்கப்படும் சிம்மாசனத்தில் ஊர்வல தெய்வமான தியாகராஜர், கமலாம்பாள் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவிலில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டு மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.

தொடர்ந்து,  அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட  கலெக்டர் தீபக்ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஆணையர் மகேஸ்வரி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஆரூரா, தியாகேசா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம்பிடிக்க  தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி சென்றது.  தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர். மேலும் சிவவாத்தியங்களும் இசைக்கப்பட்டன. கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் தேருக்கு முன்னாள் நடத்தப்பட்டன.

இந்த தேரோனா,  நான்கு ராஜ வீதிகள் வழியாக தேர் அசைந்தாடியபடி சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு,  இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்து அடையும்.

இதற்கிடையில்,  தேர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தஞ்சை மேலவீதியில் உள்ள ஒரு  தனியார் நிறுவன பெயர் பலகையில் தேரின் அலங்கார பந்தல் திடீரென சிக்கி கொண்டது. பின்னர் அதனை சரிசெய்து 15 நிமிடங்களுக்கு பிறகு தேர் புறப்பட்டது. இதையடுத்து நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, மீண்டும் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் சிக்கியது. பின்னர் இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட பிறகு தேர் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றது. ஆனால் அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் வலது புற மின் கம்பத்தில் சிக்கியதால் மீண்டும் தேர் நின்றது. இதையடுத்து மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின் மின்  ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

இந்த ஆண்டு தேரின் அலங்கார பந்தல் பல இடங்களில் சிக்கி கழிந்த நிலையில், தேர் செல்வது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேரோட்டம் நடைபெறும் என்பது தெரிந்த நிலையில், மாவட்ட நிர்வாகம், 4 மாட வீதிகளையும் முறையாக ஆய்வு செய்து, நடவடிக்கை இருந்தே இதற்கு காரணம் என பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தேரோட்டத்தையொட்டி, நான் மாட வீதிகளிலும்,  பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.  இதையொட்டி,  பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.