தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல்நடைபெற்று முடிந்தது. ஆனால் மற்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வந்ததால் வாக்கு எண்ணிக்கை மே2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றே அனைத்து மின்னணு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஓட்டு எண்ணும் மையங்கள் அனைத்திலும் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மே2ந்தேதி அன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், அன்று பொதுமுடக்கம் என்பதால், மக்கள் தேவையின்றி நடமாடுவதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் செல்போன், கேமரா, பேனாக்கள், பாட்டில்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது
டிபன்பாக்ஸ், குடைகள், வேதிப்பொருட்கள், தின்பண்டம், தீக்குச்சிகள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்களை தவிர மற்றவர்கள் வெளியில் வரக்கூடாது
என அறிவிக்கப்பட்டுள்ளது.