ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முந்நூறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதற்கு முன்னோட்டமாக 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த கைது அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சிறுபோது என்ற கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
இந்த கடையால் கிராம மக்கள் பாதிப்படைவதால் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி , பலமுறை பெண்கள் போராட்டம் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் கடையை அகற்ற மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து டாஸ்மாக் கடைக்கு முன்பு முந்நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக ஐநூறு டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் போல பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.