மீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் அதிமுக செயற்குழு கூட்டம் முதன் முறையாக இன்று கூடியது.
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் காலை 11 மணிக்கு இக் கூட்டம் துவங்கியது.
இதில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா , மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என செயற்குழுவில் அங்கம் வகிக்கும் முந்நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
download
இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வரை வாழ்த்தி 9 தீர்மானங்களும், ஆர்.கே.நகர், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து 2 தீர்மானங்களும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் வரட்சியில் வாடுவதை தடுக்க தென்னக நதிகளை இணைக்க வேண்டும், நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் , பொது தேர்தல் போல உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
இதன் பிறகு,  எதிர்வரும்  உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.