சென்னை:
ட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு விவாகாரத்தை வைத்து தி.மு.க.வுககுள் சிண்டு முடிவதா என்று ஓ.பி. எஸ்ஸூக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீல்சேரில் அமர்ந்தபடியே சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக ஸ்டாலின் கொடுத்த பட்டியலில் கருணாநிதி பெயரே இல்லை; சட்டசபைக்கு கருணாநிதி வருவதையே ஸ்டாலின் விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.
download
இந்த அறிக்கை திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் கிளப்பிவிட்டுவிட்டது. “ஓ. பன்னீர்செல்வம் அப்பட்டமான பொய்யை சொல்கிறார்” என்று திமுக எம்.எல்.ஏ. கோவி. செழியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செழியன் கூறுகையில், “சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் தற்போது வென்ற அனைத்து எம்.எல்.ஏக்களின் பெயரும் இருக்கிறது. குறிப்பாக கருணாநிதியின் பெயர் இருக்கிறது.  கருணாநிதியின் பெயர் இல்லை என்று ஓ.பி.எஸ் சொல்வது அப்பட்டமான பொய்.
இருக்கை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சபாநாயகரைச் சந்தித்து மனு கொடுத்தோம். அவர் எங்களிடம், ஏற்கெனவே இருக்கை தொடர்பாக நீங்கள் அளித்த மனுவை பரிசீலித்தேன். இப்போது மீண்டும் பரிசீலிக்கிறேன் எனக் கூறினார். ஆனால் பட்டியலில் கருணாநிதி பெயரே இல்லை என்று சொல்வதன் மூலம் சிண்டு முடியும் வேலையில் ஈடுபடுகிறார் ஓ.பி.எஸ். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார்.