சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக-சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் மக்கள் பிரதமர் மோடியின் நோட்டுத்தடை நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற செய்திருப்பதாக நம்புவது முட்டாள்தனம் என்று சிவசேனா கட்சி தனது “சாம்னா” பத்திரிக்கையின் தலையங்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
uttav
நடந்து முடிந்த மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில், பாஜக 39 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. சிவசேனாவும் கணிசமாக இடங்களை பிடித்துள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா, மராத்திய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த வெற்றியை பிரதமரின் நோட்டு தடை நடவடிக்கைக்கு ஆதரவாக மக்கள் தந்த வெற்றியாக பிரகடனப்படுத்தி வருகின்றனர்.
சிவசேனா ஏற்கனவே நோட்டுத்தடை நடவடிக்கைக்கு எதிரான மனநிலையில் இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் மாநில முதல்வர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உள்ளாட்சி தேர்தல் வெற்றியையும் நோட்டு தடை நடவடிக்கையையும் முடிச்சு போட்டு பேசிவருவது சிவசேனாவுக்கு எரிச்சலை தரவே நோட்டு தடை நடவடிக்கையையும் முடிச்சு போட்டு பேசுபவர்கள் முட்டாள்கள் என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. அது உண்மையானால் பாஜகவின் 100 பிரதிநிதிகளாவது வென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே என்று தனது பத்திரிக்கையின் தலையங்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.