சென்னை: சமூக நீதி குறித்த புரிதல் இல்லாதவர்கள் தான் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என கூறுகிறார்கள் என துணைமுதல்வர் ஓபிஎஸ்-க்கு பாமக தலைவர்  ராமதாஸ் பதில் தெரிவித்துள்ளார்.\
அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் வகையில், வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மற்ற இனத்தவர்களின் வாக்குகளை பெறும் நோக்கில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தற்காலிகமானது என அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.  பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த துணைமுதல்வர் ஓபிஎஸ்சும்,  வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானது என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாமக தலைவர்  துணை முதல்வர் ஓ.பி.எஸ்க்கு பதில் அளிக்கும் வகையில்,  சமூக நீதி குறித்த புரிதல் இல்லாதவர்கள் தான் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று சொல்கிறார்கள் என மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ”வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நீக்க முடியாது. அது நிரந்தரமானது. இந்தச் சட்டம் தற்காலிகமானது என சமூகநீதி தெரியாத சிலர் பேசிவருகின்றனர். தற்காலிக சட்டம் என்று ஒன்று இல்லை. மாறாக, மற்றொரு சட்டம் கொண்டுவரும் வரை பழைய சட்டம் நீடிக்கும். 10.5 சதவீத இடஒதுக்கீடு நிரந்தரமானது என முதல்வர் என்னிடம் ஃபோனில் கூறினார். சட்டங்களில் தற்காலிக சட்டம் என எதுவும் இல்லை. அனைத்து சமூகத்தினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின் வன்னியர்களின் மக்கள்தொகை 15 சதவீதம் கூடுதல் என்பது உறுதியாகும்” என விளக்கமளித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
https://www.patrikai.com/10-5-internal-quota-for-vanniyars-is-temporarily-only-says-deputy-cm-ops/