பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Must read

சென்னை: 
பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம்  தேதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில், பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.  இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற உள்ள ஊராக, உள்ளாட்சித் தேர்தலில் பூத் ஸ்லிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்.  பூத் ஸ்லிப் இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை,  ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், பான் அட்டை  இதில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article