டெல்லி: மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக திறக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மதத்தியஅரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவல் காரணாக, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதையடுத்து,  ஸ்டெர்லைட் நிர்வாகமான வேதாந்தா சார்பில், உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் தயாரிக்க முடியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினமும் 1050 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும், அதை இலவசமாக வழங்க தயாராக இருக்கிறோம்,  எனவே ஆலையை திறக்க அனுமதி வழங்குகள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  எஸ்.ஏ.போப்டே தலைமையிலான  மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் விசாரிக்கப்பட்டது.  மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்ல துஷார் மேத்தா,  நாட்டிற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதாக தெரிவித்தார். வேதாந்தா நிறுவனம் தனது ஆலையை  சுகாதார நோக்கங்களுக்கான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே திறக்க அனுமதி கோரியுள்ளது. அதை ஏற்கலாம்  என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி,  ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வழங்கல் குறித்து உச்சநீதிமன்றம் தன்னியக்க அறிவைக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என்றும், அப்போது இது தொடர்பாக  ஒரு தேசிய திட்டத்தை சமர்ப்பியுங்கள் என்று உத்தரவிட்டதுடன், இந்த விவகாரத்தில், 6  உயர் நீதிமன்றங்கள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. உண்மை என்ன என்பது குறித்து தெரிவியுங்கள் என்று கூறினார்.