சென்னை: பாலியல் சர்ச்சைக்குள்ளான தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார். சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி, ராமஜெயம் கொலை வழக்கை தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தூத்துக்குடி எஸ்.பி.யாக பாலாஜி சரவணன் நியமிக்கப்பட்டார். சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி., காமினி தாம்பரம் கூடுதல் போலீஸ் கமிஷனராகவும், அமலாக்கத்துறை ஐஜி ஆவடி கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel