சென்னை

ந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இந்தியாவின் 75 ஆம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி, கொரோனா தொடர்பான நூல் வெளியிட்டு விழா மற்றும் கொரோனா விழிப்புணர்வு வாகனங்கள் தொடக்கம் ஆகிய நிகழ்வுகள் நடந்தன.  இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் தமிழக மருத்துவ அமைச்சர் மா சுப்ரமணியன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மா சுப்ரமணியன் தனது உரைlயில், “கடந்த 15 நாட்களாகத் தமிழகத்தில் 2000 க்குள் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 1,700 என்றாகிவிட்டது.  இது நமது அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவே ஆகும்.

நாம் இந்தியாவிலேயே முன்னோடியாக சி.எஸ்.ஆர் பங்களிப்பைத் தடுப்பூசிக்குப் பயன்படுத்துகிறோம்.  தடுப்பூசிகள் பல மாவட்டங்களில் சி.எஸ்.ஆர் நிதியைக் கொண்டு அன்றாடம் போடப்பட்டு வருகிறது. மத்திய அரசு சுகாதாரத்துறை தமிழக அரசின் இந்த முன்னெடுப்பைப் பாராட்டியுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த வாரம் நடைபெறும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் நடைபெறும் ஆலோசனைக்குப் பின்பு முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.