சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொட முக்கியத்துவம் வாய்ந்தது, பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும், அதனால், பழைய வருத்தங்களை புறந்தள்ளுங்கள் என பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்றுமுதல் 5 நாட்கள் கேள்வி நேரமின்றி கூடுகிறது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்புக் கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரானது வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும் என்றும், “நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் காலம் குறுகியதாக இருந்தாலும், தற்போதைய சூழலில் மிகப்பெரியது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும்.
நாட்டில் உற்சாகமாக சூழல் நிலவுகிறது, இந்த கூட்டத்தொகை உற்சாகமாக நடத்த அனைவரும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை தர வேண்டும் என்றவர், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடா உருவாக்க வேண்டும் என கூறினார்.
இந்த கூட்டத்தொடரின் சிறப்பு என்னவென்றால், 75 ஆண்டுகால பயணமானது புதிய இடத்திலிருந்து தொடங்கவுள்ளது. 2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு. இதற்கான அனைத்து முடிவுகளும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எடுக்கப்படும். சந்திரயான்3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். மேலும். நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் தொடங்கும்” என்றவர், விநாயகப் பெருமானுக்கு ‘விக்னஹர்தா’ என்ற பெயரும் உண்டு, இனி நாட்டின் வளர்ச்சியில் தடைகள் இருக்காது… ‘நிர்விக்ன ரூப் சே சாரே சப்னே சாரே சங்கல்ப் பாரத் பரிபூர்ண கரேகா’… நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் குறுகியதாக இருக்கலாம், ஆனால் அது. வரலாறாக இருக்கும்.
இவ்வாறு கூறினார்.