டெல்லி: பழைய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுவதுதான் இறுதி அமர்வு என சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11மணி அளவில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த கூட்டத்தொடரில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. . பின்னா், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புக் கூட்டத்தொடா் அமா்வுகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நாளை நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டத்தொடரில் தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்புக் கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், பழைய நாடாளுமன்றத்தில் இன்று இறுதி அமர்வு நடைபெறவுள்ளதாக மக்களவையில் அவைத் தலைவர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற சிறப்பு அமர்வு குறித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஒவ்வொரு இந்தியரையும் வாழ்த்த விரும்புகிறேன். இந்த உச்சிமாநாட்டை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையையும் நான் பாராட்டுகிறேன். ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைவர் மக்கள். மையமாக மற்றும் வரும் தசாப்தங்களில், இது நமக்கு ஒரு புதிய திசையை வழங்கும்.
பிரதமர் மோடியின் தலைமையில், புது தில்லி பிரகடனம் உலகத் தலைவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாகவும், தலைமையின் கீழ் பிரதமர் மோடி, ஆப்பிரிக்க யூனியன் ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரானது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசினார்.