இதுவே வரலாறு சொல்லும் பாடம்: வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

Must read

சென்னை: இதுவே வரலாறு சொல்லும் பாடம் என வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,  “மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் சட்டத்தை ரத்து செய்வதற்கான செயல்முறையை கொண்டுவந்து நிறைவேற்றுவோம். அதனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அறிவிப்பு விவசாயகிளுக்கு கிடைத்த வெற்றி சென்றும், காங்கிரஸ், திமுக  உள்பட எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் புகழப்படுகின்றன.

இந்த நிலையில், பிரதமரின் அறிவிப்புக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்!
மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்! உழவர் பக்கம் நின்று போராடியதும் – வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்!
அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!”

More articles

Latest article