கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பரவியிருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி கூட்டம்  இல்லை, இங்குள்ள லோக்கல் வெட்டுக்கிளிகள்தான் என்று ஆய்வு செய்த வேளாண்துறைஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ராஜஸ்தான், உ.பி. போன்ற வடமாநிலங்களில் விவசாய பயிர்களை சூறையாடிய லோகஸ்ட் எனப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் தமிழகத்திலும், கேரள எல்லைப்பகுதிகளிலும் விவசாய பயிர்களை நாசமாக்கி வருவதாக கூறப்பட்டது.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், நேரலகிரி எனும் கிராமத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. இதனை பார்த்து அச்சமடைந்த அந்தப்பகுதி விவசாயிகள், வெட்டுக்கிளிகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், உடனடியாக விவசாய  அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அவசரம் அவசரமாக  தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கிடையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல்  பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் , வெட்டுக்கிளிகள் முகாமிட்டுள்ள  நேரலகிரி பகுதிக்கு விஜயம்  செய்து, அங்குள்ள விவசாயப் பகுதிகளையும், வெட்டுக்கிளிகள் முகாமிட்டிருந்த வாழைமரங்கள், எருக்கஞ்செடிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாள்ரகளை சந்தித்த அதிகாரிகள்,  கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான் என்று உறுதி அளித்தனர்.
இந்த வெட்டுக்கிளிகளால்யிர்களுக்கு பாதிப்பு  ஏற்படாது என்று கூறியவர்கள்,  எருக்கன் செடிகள், வாழை, பப்பாளி இலைகளை மட்டுமே இந்த வெட்டுக்களிகள் சாப்பிடும், இருந்தாலும், உள்ளூர் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பு கிருஷ்ணகிரியில் பயிர்கள் சேதம்

இதுபோல் கோவைப்பகுதியில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்துஆய்வு செய்து வரும், வேளாண் உதவி இயக்குனர் விஜய் கல்பனா, கோவை மாவட்டத்தில்,  நீலகிரி காந்தலுார் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் இருப்பதாக விவசாயி தெரிவித்ததால், அந்த தோட்டத்தில் ஆய்வு செய்தோம்.அங்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, வெட்டுக்கிளி இனம் எதுவும் காணப்படவில்லை.

‘கிராஸ்ஹாப்பர்’ என்ற, இங்குள்ள சாதாரண வெட்டுக்கிளிகளில் ஒன்றிரண்டை மட்டுமே பார்க்க முடிந்தது. இதனால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.