நோட்டுத்தடை பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வங்கி ஊழியர்கள்தான் என்றால் அது மிகையாகாது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இருக்கும் அலகாபாத் வங்கியில் பணிபுரியும் காஞ்சன் என்ற பெண் ஊழியர் தனது 7 மாத கைக்குழந்தையுடன் வங்கிக்கு வந்து கடுமையாக உழைக்கிறார்.

kanchan

வங்கிக்கு சரியான நேரத்துக்கு வந்து தனது குழந்தையையும் கவனித்து தனது பணியையும் சரியாக செய்யும் அவரது அர்ப்பணிப்பை காணும் வாடிக்கையாளர்கள் அவரை பாராட்டிவிட்டுச் செல்கிறார்கள். இது குறித்து பேசும் காஞ்சன், “இது போன்ற சூழலில் கடுமையான இடர்பாட்டில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம். அனைவரும் ஒன்றுபட்டு கடுமையாக உழைத்தால் நிலைமையை சீர்செய்துவிடலாம். இதுதான் இப்போதைய சூழலில் நாட்டுக்கு தேவையான விஷயம். எனவே வங்கியில் பணிபுரியும் அனைவரும் உண்மையாக பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
ஒரு தாயாகவும், ஒரு பணியாளராகவும் தனது கடமையை முகங்கோணாமல் செய்யும் இந்த முன்மாதிரி பெண்ணை இவர் பணிபுரியும் வங்கியும் இவர் குடும்பமும் வெகுவாக பாராட்டுகிறது.