விசாகப்பட்டினம்:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய 4 மாத பச்சிளங்குழந்தை சுமார் 18 நாள் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்த நிலையில், வெற்றிகரமாக குணமடைந்து பெற்றோரை சென்றடைந்துள்ளது. இந்த சாதனை விசாகப்பட்டினம்  மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தாயுடன் குழந்தை

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா, குறிப்பாக வயதானவர்களையும், சிறுவர்களையும் பலிவாங்கி வருகிறது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கிழக்கு கோதாவரி பகுதியைச்சேர்ந்த  பழங்குடிப் பெண் லஷ்மிக்கு கடந்த மே மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்கிடையில், அவரின் 4 மாத பெண் குழந்தைககும் கொரோனா தொற்று பரவயிது. இதன் காரணாக,  கடந்த  மே 25ம் தேதி விசாகப்பட்டினம் விஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு அதன் உடல்நிலை மோசமடைந்ததால், வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் , 18 நாள்கள் குழந்தைக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தை பூரண குணமடைந்து நோய் தொற்றில் இருந்து விடுபட்டது. இதையடுத்த குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து, அதன் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

பொதுவாகவே நோயாளிகள் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்றாலே அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், 4 மாத குழந்தை வெற்றிகரமாக குணமடைந்தது சாதனையாக கருதப்படுகிறது.