Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

முழு ஊரடங்கா? 15ந்தேதி மீண்டும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை…

Jun 13, 2020
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும்  15ந்தேதி (திங்கட்கிழமை)  மருத்துவநிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அப்போது கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பரவல் சமூக தொற்றாக பரவி இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு 5வது கட்ட ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால், தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22,047 பேர் குணமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும்  367-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 28,924  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில்  மேலும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. மருத்துவ நிபுணர்களும், ஊரடங்கை கடுமையாக்கினால் மட்டுமே நோய்த் தொற்றை குணமாக்க முடியும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வரும், சுகாதாரத் துறை செயலாளரும் அதை மறுத்து உள்ளனர். இந்த நிலையில்,  மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.

தலைமை செயலகத்தில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

13-06-2020 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்
18 நாள் வெண்டிலேட்டர் சிகிச்சை: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 4 மாத பச்சிளங்குழந்தை…

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer