திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.  இதை அண்ணாமலை தீபம் என அழைப்பது வழக்கமாகும்.

இந்த ஆண்டு நவம்பர் 19 அன்று மாலை அண்ணாமலை தீபம் ஏற்றப்பட உள்ளது.  இதற்குத் தேவையான எண்ணெய்கள் டின் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு கோவிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோவிலில் உள்ள 63 அடி உயரத் தங்கக் கொடி மரத்தில் இன்று காலை கொடியேற்றப்பட்டு விழா தொடங்கப்பட்டுள்ளது.  இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நவம்பர் 19 ஆம் தேதி மாலை திருவண்ணாமலை உச்சியில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.