“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க அக்கட்சிக்கு.. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உண்டு” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று கூடிய அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள், தங்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம் விரைவில் சசிகலா முதல்வர் பொறுப்பேற்பார் என்பது உறுதியானது. முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தை ஓ.பி.எஸ். அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
சசிகலா முதல்வர் ஆவதற்கு தி.மு.க., பா.ஜ.க. உட்பட பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆதரித்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், வி.கே.சசிகலா முதல்வர் பொறுப்பேற்க இருப்பதை வரவேற்றுள்ளார்.
“அது அவர்களது கட்சி விவகாரம். சசிகலாவை முதல்வராக தேரந்தெடுக்க அக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முழு உரிமை உண்டு” என அவர் தெரிவித்துள்ளார்.