ஐ.நா. சபைக்கான இந்தியாவின் புதிய நிரந்தரப் பிரதிநிதி யார் தெரியுமா?

Must read

புதுடெல்லி: ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் திருமூர்த்தி. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய வெளியுறவுத் துறையில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த திருமூர்த்தி. தற்போது இவர் ஐ.நா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில் ஓய்வுபெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா, நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உயர் பதவி மற்றும் ஐ.நா சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக பணித் துறையின் இணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி முதல் வெளியுறவுத் துறையின் பொருளாதாரப் பிரிவில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார் இவர்.

More articles

Latest article