டில்லி

ட ஒதுக்கீட்டு முறையை நீதிபதிகள் நியமனத்தில் அமல்படுத்த விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இன்று உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது.   இதில் பங்கேற்றுப் பேசிய விழுப்புரம் தொகுதி  வி சி க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்,  “உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்குப் பிறகு அரசு பொறுப்புகளில் அமர்த்தப்படுவது மூலம் நீதித்துறையை அரசாங்கம் மறைமுகமாக கைகளில் வைத்துள்ளது” என்று கூறினார்.

விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான திருமாவளவன், “இட ஒதுக்கீட்டை நீதிபதிகளின் நியமனத்தில் முறையாக அமல்படுத்த வேண்டும். தற்போதைய கொலிஜியம் முறை ஜனநாயகப்பூர்வமானதாக இல்லை என்பதால் இதனை ரத்து செய்து விட்டு ஜனநாயகப்பூர்வமானதான முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்,

“தவிர நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அநீதி இழைக்கப்படுகிறது.   சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதில் இது பிரதிபலிக்கப்பட்டுள்ளது.   உச்சநீதிமன்றக் கிளையைத் தென் இந்திய பகுதியிலுருவாக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.