சென்னை: திமுகவை விமர்சித்து வந்த விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க விசக தலைவர் திருமாவளவன்,  தொடர்ந்து, தலைமைச்செயலகம் சென்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பின்னர், நிகழும் முதல் சந்திப்பு இதுவாகும்.

தமிழகத்தில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என திமுகவின் வாரிசு அரசியல், மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசின் தோல்வி குறித்தும் விசிக துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.   அவர் பேசிய கருத்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தி.மு.கவினர் இதற்கு கடும் எதிர்வினையாற்றி இருந்தனர். மேலும் விசிகவில் உள்ள திமுக தீவிர ஆதரவாளர்களும் ஆதவ் கருத்துக்கு எதிர்வினையாற்றினர்.

இதைத்தொடர்ந்து,  ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்,   இன்று முற்பகல் தலைமைச்செயலகம் சென்ற விசிக தலைவர் திருமாவளவன், அங்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அப்போது, முதலமைச்சரிடம் விசிக சார்பில், முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார். இதையடுத்து இரு தலைவர்களும் அரசியல் நிலவரம் குறித்தும் பேசுவதாகத் தெரிகிறது.

முன்னதாக, திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. 10 லட்சம் வழங்கிட உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டு மாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி முதல்வர் வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம்! திருமாவளவன் அறிவிப்பு…

[youtube-feed feed=1]