தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
முருக கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்து ஒரே தலமாக உள்ளது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் பல்வேறு விழாக்களில் ஆவணி திருவிழா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா செப்டம்பர் 4ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
உள்ளூர் மக்களின் தரிசனத்துக்காக நடத்தப்படும் இந்த ஆவணித் திருவிழா 12 நாள்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் மூலவர் சிறிய தேரில் வலம் வருவார். அதேபோல் தெப்ப உற்சவம் இந்த நிகழ்வில் இடம்பெறாது. ஆவணி திருவிழாவானது தேய்பிறை நாள்களில் நடைபெறும். இந்த ஆவணி திருவிழாவின் சிறப்பாக சண்முகர், படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றையும் நிகழ்த்தும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பார்.
செப்டம்பர் 10ஆம் தேதியன்று சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளுவார். செப்டம்பர் 13 புதன்கிழமை ஆவணி தேரோட்டம் நடைபெற உள்ளது.
ஆவணித்திருவிழா நிகழ்ச்சி நிரல்:
3 செப்டம்பர், 2023 – ஞாயிறு மாலை: 4.30 மணி – கோயில் யானை மேல் கொடிபாதம் வீதி உலா வருதல்
4 செப்டம்பர், 2023 – திங்கள் – நாள் 1 – ஆவணி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 4.30 மணி அளவில் ஸ்ரீ அப்பர் சுவாமிகள் தங்க சப்பரம் இரவு 7 மணிக்கு ஸ்ரீ பேவிநாயகர் தந்த பல்லக்கில் அஸ்திர தேவருடன் உலா.
செப்டம்பர் 5ஆம் தேதி காலை: 10.30 மணி – சிங்க கேடய சப்பரம் ; அம்பாள் சிறிய பல்லக்கு இரவு: 7 மணி – சிங்க கேடய சப்பரம் ; அம்பாள் பெரிய கேடய சப்பரம்.
செப்டம்பர் 6 ஆம் தேதியன்று காலை: 7 மணி – பூங்கேடைய சப்பரம் – கேடயம் சப்பரத்தில் அம்பாள் ; இரவு தங்க முத்து கிடா வாகனம் – அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்.
செப்டம்பர் 7 வியாழன் காலை தங்க முத்து கிடா வாகனம்; அம்பாள் வெள்ளி அன்ன வாகனம் இரவு: 6.30 வெள்ளி யானை , அம்பாள் வெள்ளி சரப வாகனம்.
செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை காலை: 7 மணிக்கு வெள்ளி யானை , அம்பாள் வெள்ளி சரப வாகனம் மாலை 4 மணிக்கு மேலக்கோவில் அபிஷேகம், ஆராதனை இரவு: 7.30 மணி – மேலக்கோவில் குடவருவாயில் தீபாராதனை தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.
செப்டம்பர் 9 சனிக்கிழமை காலை 7 மணி – கோ ரதம் ; இரவு 8 மணிக்கு வெள்ளி தேர் , அம்பாள் இந்திர விமானம்.
செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை: 4.30 மணிக்கு பிறகு ஸ்ரீ சண்முகர் உருகு சட்ட சேவை. காலை 5.30 மணிக்கு மேல் ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான் பல்லக்கு காலை 8.30 மணி வெட்டி வேர் சப்பரத்தில் ஆறுமுக நயினார் மாலை: 4.30 மணிக்கு பிறகு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் அருள்பாலித்தல்.
செப்டம்பர் 11 திங்கட்கிழமை காலை 5 மணி – பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் ஊர்வலம். காலை 10.30 மணிக்குப் பிறகு – பச்சை சாத்தி சப்பரம் ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான், ஸ்ரீ அலைவாயுகந்தப் பெருமான் வெள்ளி குதிரை வாகனம்.
செப்டம்பர் 12, செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு பல்லக்கு இரவு 8 மணிக்கு தங்க கைலாய பர்வதம் , வெள்ளி கமலம் வாகனத்தில் அம்பாள் தேர் கடாக்ஷம்.
செப்டம்பர் 13 புதன்கிழமை ஆவணி தேரோட்டம் இரவு 7 மணிக்கு பெரிய திருப்பல்லக்கு.
செப்டம்பர் 14 வியாழக்கிழமை இரவு 7 மணி புஷ்ப சப்பரம் தெப்பக்குளம் மண்டபம் சேர்தல் அபிஷேகம், அலங்காரம் ஆராதனைக்குப் பிறகு – திருவீதி வலம், மேலைக்கோவில் சேர்த்தல்
செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி மஞ்சள் நீராடல் இரவு 9 மணி மலர் கேடய சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருக்கோவில் சேர்தல்