சென்னை: சென்னையில்  விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால்,  பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சென்னை விம்கோ நகர் முதல் சென்ட்ரல், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை சீராகும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.