திருப்பவள வண்ணர் பெருமாள் கோயில்
திவ்ய தேசங்களில் சோழ நாட்டிற்கு இணையாகத் தொண்டை மண்டலமான காஞ்சிபுரம் விளங்கி வந்தது. திருமால் தன் இஷ்டப்படியெல்லாம் நிறம் மாறி பக்தர்களுடன் கண்ணாமூச்சி விளையாடி இருக்கிறார். கார்வண்ணன் என்று பகவானை முன்பு அழைத்து வந்ததுண்டு. ஆனால் காஞ்சிபுரத்து ஸ்தலங்களில் பகவான் பவளவண்ணனாகவும் பச்சை வண்ணனாகவும் கூட மாறி தன் திருவிளையாடல்களைப் புரிந்திருக்கிறார். உலகமே அவர் திருவாயில் இருந்ததை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே நிறங்களிலும் திருமால் மறைந்திருக்கிறார்.
காஞ்சியிலுள்ள திரு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நேர் கிழக்கே உள்ளது. திரு பவளவண்ணர் பெருமாள் கோவில். இரண்டு ஏக்கர் நிலப் பரப்பளவு மேல் நோக்கிய 5 நிலை இராஜகோபுரமும் ஒரு பிரகாரம் கொண்டு அமைந்திருக்கிற இந்த கோவிலில் மூலவர் ஸ்ரீ பவளவண்ணர் பெருமாள். மேற்கு நோக்கி காட்சி தருகிறார் தாயார் ஸ்ரீ பவளவல்லி தாயார்.
விமானம் பிரவாள விமானம், தீர்த்தம் சக்கர தீர்த்தம்.
இங்கேயும் பிரம்மதேவரின் யாகக் கதை வருகிறது. பிரம்ம தேவனின் யாகத்தை அழிக்கச் சரஸ்வதி தேவியால் அனுப்பப்பட்ட கொடிய அரக்கர் கூட்டத்தைப் பிரம்மனின் வேண்டுகோளை ஏற்றுத் திருமால் கடும் கோபத்தோடு போரிட்டார். பின்னர் அவர்களை ஒன்றுவிடாமல் அளித்தார். இதனால் பகவானின் திருமேனி எங்கும் இரத்தம் தெரிவித்து விழுந்தது. அதே கோலத்தோடு இந்த ஸ்தலத்தில் நின்றதா பெருமாளுக்கு ஸ்ரீ பவள வண்ணர் என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர், சிவந்த வடிவம் கொண்டு காட்சி தருகிறார். இதை வேறு எந்த தளத்திலும் காண முடியாது அத்தினி தேவதைக்கும் பார்வதி தேவிக்கும் நேரடி தரிசனம் கொடுத்திருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.  கோவிலுக்குள் பச்சை வண்ணன் சன்னதி இருக்கிறது. பச்சைவண்ணர் ஆதிசேஷன் மீது வீற்றிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது. பிறகு மகரிஷிக்குப் பகவான் இந்த கோலத்தில் நேரிடையாகத் தரிசனம் தந்ததாகப் புராண வரலாறு உண்டு.
பரிகாரம்
“பொறாமை வயிற்ரிச்சலால் கெடுதல் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று  ஆசைப்படுபவர்கள், இராகு- கேது தோஷத்தால் பிடிக்கப்பட்டு எந்த ஒரு முன்னேற்றமும் காணாமல் துடிப்பவர்கள், புத்திரபாக்கியம் இல்லாதவர்கள், புத்திரர்கள் இருந்தும் அவர்களால் சுகம் அனுபவிக்க இயலாதவர்கள், வீண் வம்பில் மாட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டிற்க்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள், விஷப்பூச்சிகளால் கடிபட்டு நிறத்தை இழந்து இரத்தம் கெட்டு நீல முடியாதவர்கள் அத்தனை பேர்களும் ஒரு முறை இந்த புனித கோவிலுக்கு வந்து பவள வண்ணரைத் தரிசித்து தங்கள் குறைகளை எடுத்துச் சொன்னால் பகவான் விஸ்வரூபம் எடுத்த அத்தனை பேருடைய துன்பங்களை அடியோடு விரட்டுவார் என்பது சத்தியம்.