சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியரைதத் தொடர்ந்து, 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அவரது வழக்கின் 3வது நீதிபதியாக நீதிபதி எம். நிர்மல் குமாரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப்பானர்ஜி நியமித்து உள்ளார்.

ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு விவரம்:

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. சர்ச்சைக்கு பெயர்போனவரான இவர்மீது சொத்து குவிப்பு  வக்கு உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தார். மனுவில்,  74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியதாகவும் ஆனால் அதன் உண்மையான மதிப்பு 6 கோடி என்றும் அதேபோல் குறைந்த விலையில் வீட்டு மனை மற்றும் நிலம் வாங்கியதாகவும் அதன் மதிப்பு சந்தை நிலவரப்படி ஒரு கோடி என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முதல்கட்ட விசாரணையின்போது, வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தலாம் என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. அத்துடன் விசாரணை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.  இதையடுத்து மகேந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து,  மனுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி சத்தியநாராயணா. ஹேமலதா அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகைளைத் தொடர்ந்து, கடந்தமார்ச் மாதம் 4ந்தேதி தீர்ப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சத்தியநாராயணா ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார், ஆனால், மற்றொரு நீதிபதியா ஹேமலதா வழக்குப்பதிய முகாந்திரம் இல்லை, ஆகையால், வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருந்தார். 2 நீதிபதிகளும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதால் 3-வது நீதிபதி விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கின் 3வது நீதிபதியாக, நீதிபதி எம். நிர்மல்குமாரை மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நியமித்து உத்தரவிட்டுஉள்ளார்.

இந்த வழக்கு நேற்று பட்டியலிடப்பட்டிருந்தது. அதையடுத்து வழக்கை  நீதிபதி எம். நிர்மல்குமார் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான், வழக்கின் பின்னணி மற்றும் முன்னர் வழக்கைக் கையாண்ட பிரிவு பெஞ்ச் நிறைவேற்றிய தொடர் உத்தரவுகள் குறித்து நீதிபதிக்கு விளக்கமளித்தார். இதையடுத்து வழக்கை ஜூலை 22ந்தேதி வைத்த நீதிபதி, அன்று முதல் விரிவாக வாதங்களை விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.