சென்னை

மிழக அரசு இன்று முதல் வழங்க உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களின் விவரம் இதோ

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.  இதில் 20 பொருட்கள் ஒரு துணிப்பையில் வைத்து வழங்கப்பட உள்ளது.  இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.   இந்த பரிசுத்தொகுப்பை டோக்கனை காட்டி அந்தந்த நியாயவிலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த  பரிசு தொகுப்பினை இடை நில்லாது தொடர்ந்து விநியோகம் செய்ய வசதியாக நியாயவிலைக்கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   எனவே வரும் 7 ஆம் தேதி அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட உள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்பில்,

1..பச்சரிசி
2. வெல்லம்
3. முந்திரி
4. திராட்சை
5. ஏலக்காய்
6. பாசிப் பருப்பு
7. நெய்
8. மஞ்சள் தூள்
9. மிளகாய் தூள்
10. மல்லித் தூள்
11. கடுகு
12. சீரகம்
13. மிளகு
14. புளி
15. கடலைப் பருப்பு
16. உளுத்தம் பருப்பு
17. ரவை
18. கோதுமை மாவு
19. உப்பு
20. கரும்பு,

ஆகிய பொருட்கள் துணிப்பையில் வழங்கப்பட உள்ளது.