சென்னை:
சென்னை அண்ணாநகரில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் 4டயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த புதுவகையான திருட்டு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை ஜெ.ஜெ.நகரில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டி புதிய சொகுசு காரின் 4 டயர்களையும் திருடன் கழற்றிச் சென்றுள்ளான். இதுகுறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக திருடர்கள் சர்வ சாதாரணமாகவும், ஒய்யாரமாகவும் வீடுகளுக்குள் புகுந்து திருடி வருவது அதிகரித்து வரும் நிலையில், தற்போது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் டயர்கள் திருடப்பட்டு உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் பெரும்பாலான தெருக்களில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் தங்களது கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை வீட்டிற்கு முன்புள்ள சாலையோரம் நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் சென்னை ஜெ.ஜெ.நகர் டி.வி.எஸ். காலனியை சேர்ந்த மகேஷ்பாபு என்பவருக்கு சொந்தமான ‘மாருதி சியாஸ்’ என்ற சொகுசு காரின் டயர்கள் திருடப்பட்டு உள்ளன.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல்துறை யினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளைக்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.