புல்வாமா தாக்குதலில் 41 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானை சேர்ந்த 82 பேரை கொல்ல வேண்டுமென பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் கூறியுள்ளார்.

Amarinder_Singh

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ அவர்கள்( பாகிஸ்தான் தீவிரவாதிகள்) நம் நாட்டு வீரர்களை கொன்றால் நாமும் ஏதாவது செய்ய வேண்டும். இது பேச்சுவர்த்தைக்கான நேரம் இல்லை.

தாக்குதலில் 41 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதால் நாம் அவர்களின் 82 பேரை கொல்ல வேண்டும். யாரும் யாரையும் போருக்கு அழைப்பது இல்லை. ஆனால் இத்தனை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது வேடிக்கையான ஒன்று இல்லை. நாடே சோகத்தில் உள்ளது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்றார்.

மேலும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதால் தான் பாகிஸ்தான் இந்தியாவை சீண்டி பார்க்கிறது. நம்மிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. ராணு நடவடிக்கைகள் மூலமோ, அரசியல் அல்லது பொருளாதார நடவடிக்கை மூலமோ அவரளுக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் எனவும் கேப்டன் அம்ரிந்தர் சிங் வலியுறுத்தினார்.