மேலே உள்ள படத்தைப் பார்க்கும்போது இது, ஏதோ மருத்துவமனையின் கொரோனா வார்டு என எண்ணத் தோன்றும்…
உங்களது எண்ணம் உண்மைதான்…
ஆனால், இது மருத்துவமனை அல்ல…
சேலத்தில் உள்ள பதிவுத்துறை அலுவலகம்தான்… பயப்படாதீர்கள்… படத்தில் உள்ள நபர்கள் அனைவரும் பதிவுத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்.
கொரோனா பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில், கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து பணிக்கு வந்துள்ளனர்…
உயிர்ப்பயணம், கொரோனா பயம் இவர்களை எப்படி மாற்றியிருக்கிறது. இவர்கள் வித்தியாசமானவர்கள்தான்..
தமிழகத்தில் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு தளர்வும் கிடையாது என்று அறிவித்துள்ள மாநில அரசு இன்று முதல் மாநிலத்தில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்து உள்ளது.
இதற்கு பதிவுத்துறை ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல இடங்களில் வாகன வசதியின்றி பலர் வேலைக்கு வராத நிலையில், சில இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பதிவுத்துறையில் மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் நடப்பாண்டில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இலக்குடன் செயல்பட்டு வந்த பதிவுத்துறைக்கு, இதுவரை 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்காகவே இன்றுமுதல் பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்க அரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில்எந்தவித தளர்வுமின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழலில் பதிவுத்துறைக்கு வந்து யார்  பதிவு செய்வார்கள், எதற்காக பதிவுத்துறை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது…?
எல்லாம் அந்த கோவை மணிக்கே வெளிச்சம்…