முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் உண்மை அல்ல: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம்

Must read

புதுடெல்லி:
முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவல் குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் பிரதமரைச் சந்தித்த எடியூரப்பா உடல் நிலையைக் காரணம் காட்டி பதவி விலக ஒப்புக்கொண்டதாகத் தகவல் கூறப்படுகிறது. கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக எடியூரப்பா பதவி விலகக் கோரிக்கை வலுத்துள்ளது. கர்நாடக அமைச்சர்கள் சிலரே எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் கட்சி மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவல் குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவல் உண்மையல்ல என்றும், இவை அனைத்தும்  வெறும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article