காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 44வது திவ்யதேசமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறும்.
கடந்த, 2019 – 20ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், பிரம்மோற்சவம் நடைபெறவில்லை.இரு ஆண்டு இடைவெளிக்குபின் நடப்பு ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்நிலையில், காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
Patrikai.com official YouTube Channel