Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தேர்வெழுத வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்கள் தயாராக இருக்க வேண்டும்… தமிழகஅரசு

Jun 3, 2020

சென்னை:

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடல்வெப்பம்  பரிசோதிக்க, அந்தந்த பள்ளிகளே தெர்மல் ஸ்கேனர்களை வாங்கி தயாராக வைத்திருக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

கொரோனா ஊரடங்கால்  ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி  தொடங்கி 25ந்தேதி முடிவடைகிறது. இதற்காக பள்ளிகள் சுத்தப்படுத்தப்பட்டு, தேர்வுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என பள்ளிகளுக்கு  பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில்,
10ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக அனைத்து வகை உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான இருக்கை வசதி போதுமானதாக  உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்,
கூடுதலாக வகுப்பறைகள் தேவைப்படின் அருகாமையில் உள்ள நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் இருந்து உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்,

அனைத்து பள்ளிகளிலும் வெப்பநிலை பரிசோதனை கருவி (தெர்மல் ஸ்கேனர்) மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்தோ அல்லது பள்ளியின் வேறு வகையான நிதியில் இருந்தோ வாங்கி பள்ளியில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

இவ்வாறு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

Post navigation

“அப்பா! உங்களை தந்தையாக பெற்றது என் வாழ்வின் பெரும் பேறு”  கனிமொழி
அகில இந்திய மருத்துவ தொகுப்பில் 50% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer