சென்னை :

.தி.மு.க.விலும், தமிழக அமைச்சரவையிலும் முக்கிய இடத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில் “தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்த மாற்றமும் கிடையாது. சட்டபேரவை தேர்தலிலும் இந்த கூட்டணியே தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

“கடந்த 10 ஆண்டுகளாக, குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்ட அமைச்சர் தங்கமணி “தேர்தலில் எங்களுக்கு எந்த சவாலும் கிடையாது” என்று கூறினார்.

“அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்கப்படுமா?” என்று கேட்டபோது “அதற்கு வாய்ப்பே இல்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றிய நடைமுறை தொடர்ந்து நீடிக்கும்” என்று அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.

– பா. பாரதி